Religion
விநாயகர் சிலை ஊர்வல வழித்தடத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டியில், சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கவுள்ள வழித்தடத்தில், கோவை சரக டி.ஐ.ஜி.,ஆய்வு மேற்கொண்டார்.
சதுர்த்தி வரும், 14ல், நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
புன்செய்புளியம்பட்டி நகர் மற்றும் பவானிசாகர் ஒன்றிய
பகுதிகளில், இந்து முன்னணி சார்பில், 108 இடங்களில் விநாயகர் சிலைகள்
பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 18ம் தேதி மாலை, அனைத்து விநாயகர்
சிலைகளும் டானாபுதுாரில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு,
பவானிசாகர் அடுத்துள்ள, பகுடுதுறை - பவானி ஆற்றில்
கரைக்கப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சிலை ஊர்வலம்
துவங்கவுள்ள டானாபுதுார் முத்துமாரியம்மன் கோவில், நால்ரோடு
சோதனைச்சாவடி, கோவை சாலை, பஸ் ஸ்டாண்ட், பவானிசாகர் சாலை உள்ளிட்ட
வழித்தடத்தில் கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன் நேற்று ஆய்வு
மேற்கொண்டார். போக்குவரத்து மாற்றம் பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஆலோசனை வழங்கினார். சிலை ஊர்வலம் செல்லும்
முக்கிய சந்திப்புகளில்,சிசிடிவி கேமராக்கள் பொருத்த போலீசாருக்கு
அறிவுறுத்ப்பட்டது.
ஆய்வின்போது, சத்தியமங்கலம் டி.எஸ்.பி., முத்தரசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.