Religion
மானாமதுரையில் விநாயகர் சிலை கரைப்பு
மானாமதுரை, செப்.16- மானாமதுரையில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக

மானாமதுரையில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று அலங்கார குளத்தில் கரைத்தனர்.
மானாமதுரையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன் பழைய தபால் ஆபீஸ் தெரு மாரியம்மன் கோவில் தெரு, ராம்நகர், சாஸ்தா நகர், அண்ணாமலை நகர், கன்னார் தெரு உள்ளிட்ட நகரில் உள்ள தெருக்களில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சார்பில் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்தனர். நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி அன்று காலை முதலே விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைபூஜை செய்து அன்னதானம் வழங்கினர்.
ஹிந்து முன்னணி, பா.ஜ.,சார்பிலும் பழைய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று காலை நகரின் முக்கிய வீதிகளின் வழியே விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக ஆட்டம்,பாட்டத்துடன் தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார குளத்திற்கு கொண்டு சென்று கரைத்தனர்.