Religion
விநாயகர் சிலை தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரம்

நல்லம்பள்ளி: அதியமான்கோட்டை பகுதியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்-டுள்ளனர்.
நாடு முழுவதும் வரும், செப்., 14ம் தேதி விநா-யகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டா-டப்பட உள்ளது. இதில், வீடுகள், தெருக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்த-லங்கள் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதில், சிலைகள், 3 முதல், 7 நாள் வரை வைத்து வழிபாடு நடத்திய பின், ஊர்வலமாக கொண்டு சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். கடந்த ஆண்டு மாவட்டத்தில், 1,341 இடங்களில் விநாயகர் இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நீர் நிலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பவுடர்' பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு, வருவாய் துறையினர், 'சீல்' வைத்தனர்.
மேலும், சிலை தயாரிப்பு பணிகள் நடக்கும் இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டில், 'எல் நினோ' தாக்கத்தால் நீர்நிலைகள் வறண்டதுடன் நிலத்தடி நீர்மட்டமும் சரிவடைந்-தது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மரக்கன்று நடுதல், நீர்-நிலை பாதுகாத்தல் உள்ளிட்டவற்றிற்கு முக்கி-யத்துவம் அளித்து வருகின்றனர். இதனால், களி-மண்ணால் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு வர-வேற்பு அதிகரித்துள்ளதாக மண்பாண்ட தொழி-லாளர்கள் தெரிவித்தனர். மேலும், விநாயகர் சதுர்த்தி நெருங்கி உள்ளதால், அட்டை மற்றும் கிழங்கு மாவு மூலம் சிலைகள் தயாரிக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இங்கு தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள், தர்ம புரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல் உள்-ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வாங்கி செல்கின்றனர்.