Sport
முதல்வர் கோப்பை போட்டிதிருப்பூரில் இன்று துவக்கம்
திருப்பூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்’ - திருப்பூர் மாவட்டத்தில் இன்று (9ம் தேதி)) தொடங்குகிறது.இப்போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, 5 முதன்மைப் பிரிவுகளின் கீழ் நடைபெறுகின்றன.
வரும்., 20ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகள், திருப்பூரின் முக்கிய பள்ளி, கல்லுாரி மைதானங்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கங்களில் நடத்தப்பட உள்ளன.இம்மைதானத்தில், இன்று தடகளப் போட்டிகள் தொடங்குகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் செப்., 12 அன்று ஒரே நாளில் நடைபெற உள்ளன. தவிர, டென்னிஸ், குத்துச்சண்டை மற்றும் ஜூடோ போட்டிகள் கோவை மண்டல அளவில் நடத்தப்படவுள்ளன.போட்டியாளர்கள், தங்களது அடையாளச் சான்று மற்றும் ஆன்லைன் விண்ணப்ப நகலுடன் போட்டி தொடங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன்பாக மைதானத்திற்கு வருகை தர வேண்டும் என, திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

