Religion
Madurai Kumbabishegam LIVE | 17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு.. நேரலை இதோ.!

குடமுழுக்கை காணும் விதமாக சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட 51 இடங்களில் பெரிய எல். இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை அரசாளும் மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று 17 ஆம் தேதி குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. காலை 7.40 முதல் 8.10 மணி வரை குடமுழுக்கு விமரிசையாக நடைபெறவுள்ளது. நேரில் கலந்து கொள்ள முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு வழிபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கை காணும் விதமாக சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட 51 இடங்களில் பெரிய எல். இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 448 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு புதுமண்டபத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குடமுழுக்கு முடிவடைந்த பிறகு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழாவை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5 கோடி ரூபாய் அளவிலான விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கையொட்டி, 5 டன் பூக்களால் கோயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
