Politics
"திமுகவினர் செயல்களால் எனது ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது" - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட எனக்கு, திமுக நடந்துகொண்ட விதத்தால் மருத்துவர் இல்லாமலேயே அது சரியாகிவிட்டது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட எனக்கு நேற்று திமுக நடந்துகொண்ட விதத்தால் மருத்துவர் இல்லாமலேயே அது சரியாகிவிட்டது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் நகைச்சுவையாக தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்த முதல்வர் விஜய் சபை மரபுகளை மீறி பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக கொறடா எ.வ.வேலு வலியுறுத்தினார். ஆனால் இதை ஏற்க சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "முதல்வர் விஜய்யின் பேச்சை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறி மறுத்துவிட்டார்.
இதனால் திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக திமுகவினர் திரண்டு கோஷமிட்டனர்.
இதையடுத்து திமுக உறுப்பினர்களை பேரவையிலிருந்து வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில், திமுகவினர் நேற்றும் இத்தகைய முயற்சியில்தான் ஈடுபட்டார்கள் என்பதை உலகம் அறியும். அனைத்து மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யார்யாருக்கு எந்தெந்த கட்சிகள் என்னென்ன பயிற்சி அளிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மனவேதனையாக இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். குறைந்த ரத்த அழுத்தம் எனக் கூறி, மருத்துவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார். அதையும் மீறி நம்மை ஆளாக்கி அழகுபார்த்த முதல்வர் உரையைப் பார்க்க வேண்டும் என நான் இங்கு வந்து அமர்ந்தேன்.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
