Sport
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி
சரவணம்பட்டி: தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை 2026 க்கான விளையாட்டு போட்டி, நேற்று எஸ்.என்.எஸ்.கல்லுாரியில் துவங்கியது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மாணவர்களுடன் வாலிபால் விளையாடி போட்டிகளை துவக்கி வைத்தார். இன்றும், நாளையும் வாலிபால் போட்டிகள் நடக்கின்றன.
கலெக்டர் பவன்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை இயக்குனர் அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, எஸ்.என்.எஸ்.கல்வி குழுமங்கள் தலைவர் நளின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில், பெண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் நேற்று நடந்தது.