Lifestyle and human interest
ஓடும் விமானத்தில் கழன்ற சக்கரம்; நடுவானில் தத்தளித்த பயணிகள்

ஈரானில் செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், அந்த விமானத்தின் டயர் ஒன்று கழன்று விழுந்ததால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த செவ்வாய்க் கிழமை (15-09-26) அன்று செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் ஒன்று, மஷ்ஹத் நகரிலிருந்து கெர்மன்ஷாவுக்கு புறப்பட்டுச் சென்றது.
அப்போது, இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதன் சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்துள்ளது. இதனால் விமானத்தில் இயந்திரக்கோளாறு மற்றும் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். இது தொடர்பாகப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், விமானம் பாதுகாப்பாக மஷ்ஹத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில், விமானத்தில் உள்ளே இருக்கும் பயணிகள் பயத்தின் காரணமாக அலறும் சத்தங்களும், தங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற வேண்டிக்கொள்ளும் காட்சிகளையும் காணமுடிகிறது. அதே போல, அந்த விமானத்தின் உள்பக்கமாக இருக்கும் மேற்கூரைகள் இடிந்து, பயணிகள் மீதும் விழும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த சம்பவத்தில் பயணிகள் மிக அதிகமாகப் பயந்தாலும், யாருக்கும் காயங்களோ அல்லது உயிருக்கு ஆபத்தோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)