Religion
விநாயகர் சிலை வினியோகம்
ஈரோடு:விநாயகர் சதுர்த்தி வரும், 14ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக ஹிந்து முன்னணி சார்பில் ஈரோடு சின்ன

சதுர்த்தி வரும், 14ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக ஹிந்து
முன்னணி சார்பில் ஈரோடு சின்ன சடையம்பாளையத்தில் விநாயகர் சிலை
தயார் செய்யப்பட்டது. ஹிந்து முன்னணியினருக்கு வழங்குவதற்காக
மட்டுமே சிலைகள் வழங்கப்படும்.
மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை வினியோகம், மாவட்ட
தலைவர் ஜெகதீசன் தலைமையில் நேற்று காலை தொடங்கியது. சிலைகளை சொந்த
இடத்தில் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். 14ல் சிலைகளை பிரதிஷ்டை
செய்து பூஜிக்க வேண்டும். 17ல் ஊர்வலத்துக்காக சம்பத் நகர் பிரிவுக்கு
கொண்டு வர வேண்டும் என்றும், ஹிந்து முன்னணி நிர்வாகிகள், சிலைகளை
வாங்கி செல்லும் பிரமுகர்களுக்கு அறிவுறுத்தினர்.