Arts, culture, entertainment and media
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 44 டாஸ்மாக் ஊழியர்கள் ‘சஸ்பெண்ட்’
காஞ்சிபுரம்: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 44 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் தெற்கு டாஸ்மாக் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், 81 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், 121 மேற்பார்வையாளர்கள், 344 விற்பனையாளர்கள், 12 விற்பனை உதவியாளர்கள் என மொத்தம், 477 பேர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இரு தினங்களாக, காலி மதுபாட்டில் திரும்ப பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழ்நாடு மாநில வாணிப கழக காஞ்சிபுரம் மாவட்ட மேலாளர் கணேஷ் என்பவர், இரு தினங்களுக்கு முன் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் குறித்து, விளக்க கடிதம் கேட்டு நோட்டீஸ் வழங்கி இருந்தார்.
இருப்பினும், சில டாஸ்மாக் ஊழியர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி முழுநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம், 34 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், 10 டாஸ்மாக் விற்பனையாளர்கள் என, 44 பேரை, டாஸ்மாக் நிறுவன காஞ்சிபுரம் மாவட்ட மேலாளர் கணேஷ் சஸ்பெண்ட் செய்துள்ளார்.