Politics
“எனது உடல் மொழியில் உள்நோக்கம் இல்லை…” – முதலமைச்சர் விஜய் விளக்கம்
முதலமைச்சர் விஜய், மிசா கைதுகள் குறித்து பேசியபோது, தனது உடல்மொழி உள்நோக்கம் கொண்டதல்ல என விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் குறித்து நேற்று (7ஆம் தேதி) முதலமைச்சர் விஜய் பதிலுரை கொடுத்தார். அப்போது திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த முதலமைச்சர் விஜய், மிசா கைதுகள் குறித்தும் பேசினார்.
அப்போது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மிசாவில் கைதானதை குறித்து சைகை செய்து முதலமைச்சர் விஜய் பேசினார். இதற்கு திமுக தலைவர்கள் உட்பட, தவெக அரசு ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் முதலமைச்சர் விஜயை விமர்சித்திருந்தனர்.
குறிப்பாக தவெக அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு அளித்து வரும் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், “அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்” என காட்டமாக விமர்சித்திருந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த 'பதிலுரையில்' எந்த பதிலும் இடம் பெறவில்லை.
இதேபோல் சிபிஎம் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன், “மிசா தாக்குதலை நியாயப்படுத்தி, கொச்சைப்படுத்துகிறார் முதலமைச்சர். அதே தாக்குதலை இவர் அரை மணி நேரமாவது தாங்கிக் கொள்வாரா?” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், “எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை” என விளக்கம் கொடுத்துள்ளார்.
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை…
இது குறித்து முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜோதிகாவின் 20ம் ஆண்டு திருமண உடையில் இவ்வளவு காதல் குறியீடுகளா? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!
20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா - ஜோதிகா மீண்டும் திருமணம்!
இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் உடையில் பல குறியீடுகள் இருந்துள்ளன.
சுவாரஸ்யமான அந்த டீடெய்ல்ஸை இங்கே தெரிஞ்சுக்கோங்க!
