“தவெகவினர் பணத்துடன் வந்து பேசினார்கள்” - ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் மாநிலத்தையே புரட்டிப் போட்டது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்த திமுக, அதிமுக என இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட த.வெ.க.வை தேர்ந்தெடுத்தனர். இருப்பினும், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், தவெக ஆட்சியமைக்க இழுபறி நீடித்தது.
அதனை தொடர்ந்து காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தன. இதனையடுத்து, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் சி.வி.சண்முகம் தலைமையிலான பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் பலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதற்கிடையில் அமமுகவின் ஒரே ஒரு எம்.எல்.ஏவான மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ காமராஜ், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஒப்புதலில் இன்றி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அதிமுக, அமமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)






