உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்காதீங்க! பி.ஏ.பி., விவசாயிகள் இன்று போராட்டம்
பொள்ளாச்சி: உப்பாறு அணைக்கு நீர் திறக்க பரிந்துரை செய்வதை கண்டித்து, பி.ஏ.பி., விவசாயிகள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து, நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பாசனத்துக்கு நீர் வினியோகம் செய்யப்படுகிறது. நடப்பாண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இச்சூழலில் உப்பாறுக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் அறிக்கை:



