ராமநாதீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஓதுவார் பார்த்திபன் தலைமை தாங்கினார். ஓதுவார்கள் சன்னியாசி, ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். காலை 10:00 மணியளவில் அளவில் ராமநாதீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் தேவார திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.



