திருவாசகம் முற்றோதல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சாமியார் மடம், செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம், திருநீற்றம்மை உடனுறை செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினமான நேற்று கோவிலின் ஓதுவார்கள் காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, பன்னிரு சைவத் திருமுறைகளில் 8ம் திருமுறையாக உள்ள திருவாசகத்தின் 51 பதிகங்கள், அதிலுள்ள 658 பாடல்கள் முழுதையும் படித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வழிபாடுகள் திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் திருக்கூட்ட தலைவர் நாச்சியப்பன் தலைமையில் நடந்தது.