ராமநாதீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஓதுவார் பார்த்திபன் தலைமை தாங்கினார். ஓதுவார்கள் சன்னியாசி, ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். காலை 10:00 மணியளவில் அளவில் ராமநாதீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் தேவார திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
ஓதுவார்கள் அருணாசலம், ராமர், திலகம், சிவகுரு உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருவாசகம் முற்றோதல் குழுவினர் செய்தனர்.