“இந்தியாவில் ஸ்டார்ட் அப் புரட்சி நடைபெற்று வருகிறது” - பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் மோடி, இந்தியாவில் ஸ்டார்ட் அப் புரட்சி நடப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
உலகில் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவும்போது இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் ஸ்டார்ட் அப் புரட்சி நடைபெற்று வருவதாகக் கூறினார். முன்னதாக பேசிய ரஷ்ய அதிபர் புதின், கடந்த 5 ஆண்டுகளில் உலக ஜிடிபி-யில் பிரிக்ஸ் நாடுகளே 40 சதவீத பங்களிப்பை வழங்கி இருப்பதாகக் குறிப்பிட்டார்.



