Politics
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியா வளர்ச்சி: பிரதமர் மோடி
2014ஆம் ஆண்டு முதல் 40 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் தொழில்மன்ற கூட்டத்தில் உரை.

2014ஆம் ஆண்டு முதல் 40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த பிரிக்ஸ் அமைப்பின் தொழில்மன்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், 2006ஆம் ஆண்டு இந்த அமைப்பை துவக்கிய போது, 4 நிறுவன நாடுகள் மட்டுமே இருந்த நிலையில், இன்று நமது குடும்பம் விரிவடைந்து 21 உறுப்பு மற்றும் கூட்டணி நாடுகள் உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டில் சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் வேகமாக விரிவுப்படுத்தப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கப்பல் கட்டுமானம், செமிகண்டக்டர், குவாண்டம் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் புதிய திறன்களை இந்தியா உருவாக்குவதாகவும் பிரதமர் கூறினார்.