திருப்பூர்: யானை தந்தத்தை பதுக்கிய வனத்துறை அதிகாரி உள்பட 3 பேர் கைது
உடுமலைப்பேட்டை,திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனப்பகுதியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், யானை தந்தத்தை பதுக்கி வைத்திருந்த வனத்துறை அதிகாரி மாரிமுத்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனப்பகுதியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், யானை தந்தத்தை பதுக்கி வைத்திருந்த வனத்துறை அதிகாரி மாரிமுத்து உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடுமலைப்பேட்டை வனப்பகுதியில் யானை தந்தம் பதுக்கப்பட்டு இருப்பதாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரி மாரிமுத்து மற்றும் அவருடன் இருந்த இருவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.




