பெண் யானையின் கோரைப்பல்.. லட்சக் கணக்கில் டீல்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெண் யானையின் கோரை பல்லை கடத்தி விற்க முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அமராவதி நகர் பாறை பகுதியில், யானையின் கோரைப் பல்லை ஒரு நபர் விற்பனைக்காக வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. பெண் யானையின் கோரை பல் இருப்பதாகவும், அதைப் பல லட்ச ரூபாய்க்குப் பேரம் பேசி டீல் முடிக்கக் காத்துக்கிடப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
