இன்னும் 67 ரன்கள்... உலக சாதனையை நெருங்கிய ஸ்மிருதி மந்தனா!
துபாய்,இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றை படைக்க உள்ளார். ஆசிய கோப்பை தொ
10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
நேற்று நடந்த முதல் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியை இந்தியா, வரும் 13-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும்.





