Sport
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: ஸ்மிருதி, ஷஃபாலி அசத்தல்; இலங்கைக்கு 184 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது.
அரைசதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா - படம் | பிசிசிஐ
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபையில் உள்ள துபை சர்வதேசத் திடலில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தியா - இலங்கை இடையிலான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா அரைசதம் விளாசல்!
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஷஃபாலி வர்மா 39 பந்துகளில் 68 ரன்களும் (9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ரன்களும் (5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, ரிச்சா கோஷ் 17 ரன்கள், கமலினி 15 ரன்கள், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 ரன்கள் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் மிதாலி அயோத்யா, சமாரி அத்தப்பத்து மற்றும் சௌமுடி பிரபோதா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
Batting first in the Asia Cup final, the Indian team scored 183 runs for the loss of 5 wickets.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.