Sport
டி20யில் அதிக ரன்கள்: ஸ்மிருதி மந்தனாவை முந்திய ஷஃபாலி வர்மா!

இந்திய டி20 வீராங்கனை ஷஃபாலி வர்மாவின் புதிய சாதனை குறித்து...
ஷஃபாலி வர்மா - படம்: எக்ஸ் / பிசிசிஐ வுமன்
இந்திய டி20 வீராங்கனை ஷஃபாலி வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்மிருதி மந்தனாவை முந்தி முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
மகளிருக்கான ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அத்திருந்தார். அதனால் அவருக்கு ஆட்ட நாயகி விருது அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக இதுவரை 115 சர்வதேச டி20 போட்டிகளில் 3,069 ரன்கள் குவித்துள்ளார். அதில் இந்தாண்டில் மட்டுமே 593 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த அரைசதத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தாண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார்.
2026: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்
Shafali Verma's decisive knock earns her the ðð¥ðð²ðð« ð¨ð ðð¡ð ððððð¡ in Semi-Final 1 â#DPWorldWomensAsiaCup2026 #INDWvBANW #ACC pic.twitter.com/FPxF6HncOF
— AsianCricketCouncil (@ACCMedia1) September 10, 2026
Shafali Verma surpasses Smriti Mandhana to become India’s leading run-scorer in T20Is in 2026
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.