மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு துப்பாக்கி, போலி அடையாள அட்டையுடன் வந்த இருவர் கைது
மும்பை: பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு பிரதமர் அலுவலக அதிகாரி என வந்தவர் மற்றும் அவருடன் துப்பாக்கி கொண்டு வந்தவர் என இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள நீடா அம்பானி கலாசார மையத்தில் இன்று( செப்.,08) நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சந்தேகத்திற்கு உரிய முறையில் நடந்து கொண்ட ஒருவரையும், அவரது உதவியாளர் ஒருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





