டாஸ்மாக் பார்களில் உணவகங்களுக்கு அனுமதி -அமைச்சர் விக்னேஷ்
கோவை,"டாஸ்மாக் பார்களில் உணவகங்களுக்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக்
"டாஸ்மாக் பார்களில் உணவகங்களுக்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் உள்ளன. இக்கடைகள் மூலம் அரசுக்கு தினமும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்து வருகிறது. அதேநேரம், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து இயங்கும் பல பார்கள் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுவதாக, நீண்ட காலமாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களின் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதைப் போல, உணவகத்துடன் இணைந்து மதுபானம் வழங்கும் 'ரெஸ்டோ பார்' முறையை தமிழகத்திலும் அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


