“அரசன்” படம் தரமான சம்பவம் செய்யும் - அப்டேட் கொடுத்த சிலம்பரசன்
சென்னை,நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிலம்பரசன், “அரசன் திரைப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசம
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிலம்பரசன், “அரசன் திரைப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பொங்கலுக்கு படம் ரிலீஸாகவில்லை. நீங்கள் அனைவருமே பெருமைப்படும் வகையில் அரசன் படம் தரமான சம்பவத்தை செய்யும்” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் (எஸ்டிஆர்) நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


