Arts, culture, entertainment and media
இந்திக்கு துரந்தர்... தமிழுக்கு அரசன்... - சிம்பு அதிரடி அறிவிப்பு!

வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘அரசன்’. எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தில் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். வட சென்னை பட உலகை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பு புரொமோ கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. அந்த புரோமோவில் சிம்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் காட்சிகளும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி பின்பு சென்னையில் தொடர்ந்து தற்போதும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கிறது. சமீபத்தில் சென்னை தரமணியில் நடந்து வந்த படப்பிடிப்பில் அனிருத் சர்பிரைஸாக சென்று படக்குழுவினரை சந்தித்து பேசினார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் சிம்பு.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, “இந்த படம் குறுகிய காலத்தில் எடுக்கக்கூடிய சாதாரண படம் கிடையாது. என் கேரக்டரின் சின்ன வயதிலிருந்து பெரிய வயதாகும் வரை எடுக்க வேண்டும். நிறைய கெட்டப் விதவிதமாக இருக்கிறது. வெற்றிமாறனை பற்றி உங்களுக்கு தெரியும். அவர் பெர்ஃபெக்ஷன் பார்ப்பார். இந்தி சினிமாவுக்கு துர்ந்தர் எப்படி பெருமை சேர்த்ததோ தமிழ் சினிமாவுக்கு அரசன் படம் பெருமை சேர்க்கும். அதற்காகத்தான் உழைத்து கொண்டிருக்கிறோம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)