Arts, culture, entertainment and media
பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை... தீபாவளிக்கு தியேட்டருக்கு வாங்க... - ட்விஸ்ட்டுடன் சிம்பு கொடுத்த ‘அரசன்’ அப்டேட்ஸ்!

வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘அரசன்’. எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தில் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். வட சென்னை பட உலகை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பு புரொமோ கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. அந்த புரோமோவில் சிம்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் காட்சிகளும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி பின்பு சென்னையில் தொடர்ந்து தற்போதும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கிறது. சமீபத்தில் சென்னை தரமணியில் நடந்து வந்த படப்பிடிப்பில் அனிருத் சர்பிரைஸாக சென்று படக்குழுவினரை சந்தித்து பேசினார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு, படம் வெளியீடு குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “இது கொஞ்சம் கஷ்டமான செய்தி. இந்த படம் பொங்கலுக்கு வராது. ஏன் என்றால், இந்த படத்தை கொஞ்சம் வேகமாக எடுத்து ரிலீஸ் பண்ணலாம். ஆனால் அந்த மாதிரி எடுக்கும் போது நாங்கள் எதிர்பார்த்தளவு படத்துடைய தரம் வரவில்லையென்றால் அது தப்பாகிவிடும். அதனால் நாங்கள் நேரம் எடுத்தாலும் தரமாக எடுக்க முடிவெடுத்திருக்கிறோம். நான் உங்களுக்கு ஏற்கனவே ஒரு வாக்கு கொடுத்திருக்கிறேன். உங்களை பெருமைப் படுத்துவது போல் படம் பண்ணுவேன் என்று. அந்த வாக்கை காப்பாற்றுவது போல் இந்த படம் சம்பவம் பண்ணும்.
ஆனால் ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். ஏற்கனவே இந்த படத்தின் புரோமோ தியேட்டரில் வெளியானது போல், இதுவரை எடுத்த படத்தை வைத்து ‘அரசன் படத்தின் உலகம்’(world of arasan) என்ற ஒரு பிரத்யேக முன்னோட்டம் வரும் தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும். அதனால் தீபாவளிக்கு எல்லாரும் தியேட்டருக்கு வாங்க” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)