சினிமா உலகில் மற்றொரு விவாகரத்து... மனைவியைப் பிரிந்தார் 'மஞ்சும்மல் பாய்ஸ்' பட நடிகர்!
'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்.
சமீபகாலமாக சினிமா உலகில் விவாகரத்து அதிகமாகி வருகிறது. ரவி மோகன், ஜி.வி.பிரகாஷ் போன்றோர் அண்மையில் தங்கள் மனைவிகளைப் பிரிந்தனர். இவர்கள் வரிசையில் அடுத்ததாக தனது மனைவியைப் பிரிந்ததை உறுதிபடுத்தியிருக்கிறார் 'மஞ்சும்மல் பாய்ஸ்' பட நடிகர். மலையாள சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீநாத் பாஸி. 'ஹோம்' மற்றும் 'மஞ்சும்மல் பாய்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தில் குழிக்குள் விழும் சுபாஷ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீநாத் பாஸி. இதன் மூலம் மலையாளத்தைத் தாண்டியும் பிரபலமானார். இந்த நிலையில் தான் ஸ்ரீநாத் பாஸி தனது 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவித்திருக்கிறார்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
