Arts, culture, entertainment and media
’10 வருடத் திருமண வாழ்க்கை’; ரகசியத்தை வெளியிட்ட இளம் நடிகர்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் ஸ்ரீநாத் பாசி. குறிப்பாக சொல்லவேண்டுமானால், ’மஞ்சுமேல் பாய்ஸ்’ படத்தில் இவர் சுபாஷ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மலையாளத்தையும் தாண்டி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. இதனால், இவர் மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துத் தெரிவித்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தனது திருமண வாழ்க்கை குறித்துப் பேசிய அவர், ”கடந்த 2024 ஆம் ஆண்டிலேயே நானும் எனது மனைவியும் பிரிந்துவிட்டோம். விவாகரத்திற்குப் பிறகு நான் எனது பெற்றோருடன் வசித்து வருகிறேன். இந்த விஷயம் மிக நெருங்கிய சிலருக்கு மட்டுமே தெரியும். எனக்கு விவாகரத்தான விஷயம் வெளியுலகில் யாருக்கும் தெரியாது. இப்போது தான் முதன்முதலாகக் கூறுகிறேன்” என்று பேசியிருந்தார்.
இது, அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருந்தது. காரணம், அவர் தனது மனைவியான ரீத்து ஜக்காரி என்பவரைக் கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீநாத் பாசி சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தொலைக்காட்சித் தொகுப்பாளராகப் பணியாற்றிய காலத்திலேயே ரீது ஜக்காரியாவை சந்தித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து, நண்பர்களாக இருந்த வந்த இவர்கள் பின்னாளில் காதலர்களாக மாறினர். தற்போது, இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்த சூழலில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் விவாகரத்து செய்துகொண்டது மட்டுமல்லாமல் ஒரு பிரபலமாக இருந்த போதும் அவரது வாழ்க்கை குறித்த முக்கியமான சம்பவம் வெளியுலகிற்குத் தெரியாமல் ரகசியமாக இருந்துள்ளது என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)