மரக்காணத்தில் மீன் பிடி துறைமுகம் அமைப்பது குறித்து சட்டசபையில் பேசாததால் போராட்டம்
மரக்காணம்: மரக்காணத்தில் மீன் பிடி துறைமுகம் அமைப்பது குறித்து சட்டசபையில் பேசாததால் இ.சி.ஆர்., சாலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில், 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகு மூலம் மீன் பிடித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் இல்லாததால் மழை, புயல் காலங்களில் மீனவர்கள் படகுகளை கடலுார் பகுதியில் உள்ள துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி செல்கின்றனர்.


