நெல்லையில் இஸ்லாமியர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பயோமெட்ரிக் பதிவு - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்
நெல்லை,நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் இஸ்லாமிய மக்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து கைரேகை, கண் கருவிழி பதிவு மற்றும் பல கோணங்களில் புகைப்படங்களை எடு
நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் இஸ்லாமிய மக்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து கைரேகை, கண் கருவிழி பதிவு மற்றும் பல கோணங்களில் புகைப்படங்களை எடுக்கும் நெல்லை மாநகரக் காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில சமூக மக்களைப் பிறப்பாலேயே குற்றவாளிகளாக சித்தரித்து, அவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்து, சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய கொடூரமான 'குற்றப்பரம்பரைச் சட்டம்' நடைமுறையில் இருந்தது. பல தியாகப் போராட்டங்களுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் ஒழிக்கப்பட்ட அந்தப் பாசிச நடைமுறையை, தற்காலத்தில் நெல்லை மேலப்பாளையத்தில் காவல்துறை கையில் எடுத்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் அமைதியுடன் வசித்து வரும் மேலப்பாளையம் பகுதியில், எவ்வித சட்டப்பூர்வ அழைப்பாணையோ முறையான காரணமோ இன்றி அப்பகுதி மக்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கண் ரேகை, கைரேகைகளைப் பதிவு செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்துபோன சிறிய சமுதாய வழக்குகளை காரணம் காட்டி, குறிப்பிட்ட ஒரு சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை மட்டுமே குறிவைத்து இத்தகைய அடக்குமுறையை ஏவுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
