கைரேகை, பதிவுசெய்யும் காவல்துறை! - அச்சத்தில் இஸ்லாமியர்கள்!

இஸ்லாமியர்களை காவல்நிலையத்திற்கு வர வழைத்து அவர்களின் கை, கருவிழி பதிவுகளை போலீசார் பதிவுசெய்வதால் பீதியிலும் அச்சத்திலும் இருக்கிறது மேலப்பாளையம் நகரம்.
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட மேலப் பாளையம் நகரில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற் பட்ட இஸ்லாமிய மக்கள் வசித்துவருகின்றனர். தற்போது நெல்லை மாநகர காவல்துறை சார்பில் மேலப்பாளையத்திலுள்ள இஸ்லாமியர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்த போலீசார், அவர்களை ரேஷன் கடைகளில் படம் எடுப்பது போன்று பல கோணங்களில் புகைப்படம் எடுத் தும், கையெழுத்து பெற்றும், கைரேகை மற்றும் கருவிழிகளை பதிவுசெய்த பின்னரே அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களிடமும் தற்போது தகவல் சேகரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் மேலப்பாளையம் பகுதி மக்கள் அச்சத்திற்கும் கடும் நெருக்கடிக்கும் ஆளாகிவருகின்றனர்.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கையில், "நெல்லை மேலப்பாளையம் பகுதி யில் முஸ்லிம்களுக்கு எவ்வித அழைப்பாணையும் வழங்காமல் காவல்நிலையத்திற்கு அழைத்து அவர்களின் கைரேகை, கருவிழிப் பதிவு போன்றவற்றை எடுப்பதாக தகவல்கள் வருகின் றன. இவ்வாறு தகவல் சேகரிக்கப் பட்டவர்கள் சுமார் 20 ஆண்டு களுக்கு முன்பு சிறிய, சமுதாய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எனத் தெரிய வருகிறது. இதுகுறித்து காவல்துறையிடம் விளக்கம் கேட்டால், வேறு மாநில வழக்குகளை பரிசோதிப் பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுவதாக கூறுகின்றனர். இதன்மூலம் மேலப்பாளையம் முஸ்லிம்களை வேறு மாநில வழக்குகளில் சிக்கவைக்க சதி நடக்கிறதோ என்கிற அச்சமும் எழுகிறது.'' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளரான பிலால், "சட்டம் ஒழுங்கிற்கு எதிராக செயல்படு பவர்கள், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை நீங்க கைரேகை, கருவிழிப் பதிவு எடுங்கள். ஆனால் குடும்பத்தோடு கூலிப் பிழைப்பு நடத்திவருபவர்களை காவல்நிலையத்திற்கு அழைக்கும்போது, ஏன் இப்படி, என்ன ஏது போன்ற கண்ணோட்டத்தோடு பார்ப்பதோடு, குடும்பம், சுற்றத்தார் அவர்களை தனிமைப்படுத்து கிறவிதமாகவும் அமைந்துவிடும். அதனால் அவர் களது வாழ்வே கேள்வியாகிவிடும். இதுபோன்ற செயல்களால் மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்சமும் நிலவி வருகிறது''’என்றார்.
சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை கணக்கெடுக்க திண்டுக்கல் மாவட்ட குஜிலியம்பாறை தாசில்தார் சுற்றறிக்கை வெளியிட்டது பரபரப்பையும் அரசியல் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. அதேபோன்று மேலப்பாளையத்தில் காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
