மாநகராட்சிகள் முன்கூட்டியே கலைப்பு? தவெக அரசு அதிரடி திட்டம்!
- நமது நிருபர் - தமிழகத்தில் மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைத்து, தனி அதிகாரிகளை நியமிக்க தவெக அரசு
தமிழகத்தில் மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைத்து, தனி அதிகாரிகளை நியமிக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்தும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தவெகவுக்கு கவுன்சிலர்கள் இல்லாததால், இன்னும் திமுக ஆட்சி போல காட்சிகள் நடக்கின்றன. ஆட்சியை இழந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளில் திமுக வலுவாக இருப்பதால் தோல்வியிலும் உத்வேகமாக செயல்படுகிறது.
இதன் தாக்கம், சட்டசபையில் எதிரொலிப்பதாக தவெக நம்புவதால், திமுகவுக்கு 'செக்' வைக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், மார்ச் வரை இருந்தாலும், மாநகராட்சிகளை மட்டும் முதற்கட்டமாக கலைக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது.





