அங்கே அப்படி... இப்படி இப்படி! நகராட்சி கமிஷனர், இன்ஜினியர் மீது புகார் கவுன்சிலர்கள் முற்றுகையால் பரபரப்பு
திருமுருகன்பூண்டி:திருமுருகன்பூண்டி நகராட்சியில் மக்களுக்கான வளர்ச்சி பணிகள் எதுவும் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, நகராட்சி தலைவர் குமார் தலைமையில் கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கூறியதாவது:
நகராட்சிக்கு நிரந்தர கமிஷனராக பாலமுருகன் பொறுப்பேற்ற பின், மன்றக் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. வரும் 24-ம் தேதி பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான டெண்டர் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாகவே, மன்றக் கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். இதனால், 29-ம் தேதி கூட்டம் நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
