பங்காரம் லட்சுமி கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கல்வியியல் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, கல்லுாரி சேர்மன் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், பொருளாளர் சாந்தி, இயக்குநர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் சக்ரவர்த்தி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் வாழ்த்திப் பேசினார்.
துணை முதல்வர்கள் சக்திவேல், சசிகலா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். வணிகவியல் துறை தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.



