கல்லுாரி முதலாமாண்டுவகுப்புகள் துவக்க விழா
தேனி, செப்.10–தேனி நாடார் சரஸ்வதி பொறியில் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்கவிழா நடந்தது.
விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன், கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். கோவை பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் நவீன தொழில்நுட்பங்கள், புதுமையான கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். முதலாமாண்டு மாணவர்களுக்கு இதர மாணவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.