மின்வாரிய ஐக்கிய சங்கம் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்;தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், மின்சார வாரிய பென்சனர் ஐக்கிய சங்கம், ஐ.டி.ஐ., படித்த வேலை வேண்டுவோர் ஐக்கிய சங்கங்கள் சார்பில், நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது
. வட்டத்தலைவர் அமல்ராஜா தலைமை வகித்தார். செயலாளர் முத்துசாமி, ஓய்வு பெற்ற சங்க நிர்வாகி சித்தார்தன், மண்டல செயலாளர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதில், ஐ.டி.ஐ., படித்த இளைஞர்களுக்கு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தமிழகரசு சார்பில் நடைபெறும் தேர்வாணையத்தில் தேர்ச்சி பெற்ற, அனைத்து பட்டதாரிகளுக்கும் பணியில் அமர்த்த வேண்டும். களப்பணி தொழிலாளர்களுக்கு பயிற்சி காலத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


