Arts, culture, entertainment and media
டி.என்.இ.பி., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:நாமக்கல்லில், டி.என்.இ.பி., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
டி.என்.இ.பி., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் ஆர்ப்பாட்டம்
நடந்தது.
மாநில துணை தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். திட்ட அமைப்பு
செயலாளர் சுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார். திட்ட செயலாளர்
சசிகுமார் சிறப்புரையாற்றினார்.இதில், மின்வாரியத்தில்
காலியாக உள்ள அடிப்படை பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கேங்மேன்
பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும். ஸ்மார்ட் மீட்டர்
திட்டம், மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்
என்பன உள்ளிட்ட, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், நாமக்கல் கோட்ட செயலாளர் துரைசாமி,
திட்ட பொருளாளர் சக்திவேல், துணைத்தலைவர் ராமன் உள்ளிட்ட மின்வாரிய
தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.