Arts, culture, entertainment and media
தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி வட்டக்கிளை தலைவர் காமராஜன் தலைமை வகித்தார். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், கேங்மேன் பணியாளர்களை நியமித்தல், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுதல், தனியார் மயமாக்களை கைவிடுதல் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் செயலாளர் மூக்கையா, பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.