அதிகரித்த மின் தேவை; தினமும் ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின்தடை என தகவல்
சென்னை, தமிழகத்தில் கோடை காலங்களில் பொதுவாக மின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி, தமிழகத்தின் மின் தேவை இதுவரை இல்லாத அளவிற்கு
தமிழகத்தில் கோடை காலங்களில் பொதுவாக மின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி, தமிழகத்தின் மின் தேவை இதுவரை இல்லாத அளவிற்கு 21,211 மெகாவாட் வரை அதிகரித்தது. கோடை காலத்திற்கு பிறகு ஜூலையில் இருந்து வெயில் குறையும்போது, மின் தேவையும் படிப்படியாக குறையும்.
ஆனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் முதல் முறையாக ஜூலை 14-ந்தேதி தமிழகத்தின் மின்தேவை, 21,724 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. அதுமட்டுமின்றி, தினந்தோறும் மாலை நேரங்களில் மின் தேவை சராசரியாக 20 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வந்த நிலையில், இந்த மாதத்தில் அது 21 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே சென்னை புறநகர் உட்பட, பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தினமும் ஒரு மணி நேரம், குறிப்பாக இரவு நேரங்களில் முன் அறிவிப்பின்றி மின் தடை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

