தென்காசி அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்த அரசுப்பேருந்து; 30 பயணிகள் படுகாயம்
தென்காசிதென்காசி அருகே ஆற்றுக்குள் அரசுப்பேருந்து கவிழ்ந்ததில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.தென்காசி அருகே வேட்டைக்காரன் குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரச
தென்காசி அருகே ஆற்றுக்குள் அரசுப்பேருந்து கவிழ்ந்ததில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தென்காசி அருகே வேட்டைக்காரன் குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் பலர் அலறி கூச்சலிட்டனர். பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

