அரசு பஸ் ஆற்றில் பாய்ந்து 30 பயணியர் படுகாயம்

தென்காசி: ஆற்றுக்குள் அரசு பஸ் க விழ்ந்து, டிரைவர் சிவசக்தி, 45, உட்பட, 30 பயணியர் படுகாயமடைந்தனர்.
தென்காசியில் இருந்து நேற்று காலை, 7:00 மணிக்கு, 30-க்கும் மேற்பட்ட பயணியருடன் நெல்லை நோக்கி புறப்பட்ட அரசு பஸ்சை, டிரைவர் சிவசக்தி ஓட்டினார்.
வேட்டைக்காரன்குளம், அழுதகண்ணி ஆற்று பாலத்தில் சென்ற பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றில் பாய்ந்தது. அதிர்ச்சியடைந்த பயணியர் பயத்தில் அலறினர். இதில், 30 பயணியர் படுகாயமடைந்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், போலீசார், பயணியரை மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கிய ஒருவரை, தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி, ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் மீட்டனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
குற்றாலம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.