“பெத்லகேம் குடும்ப யூனிட்” - சினிமா விமர்சனம்
சென்னை,இறந்து போன காதலியின் நினைவாக திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார், நிவின் பாலி. அவரது பக்கத்துக்கு வீட்டுக்கு வரும் கல்லூரி மாணவி மமிதா பைஜூ, நிவின் பாலி
இறந்து போன காதலியின் நினைவாக திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார், நிவின் பாலி. அவரது பக்கத்துக்கு வீட்டுக்கு வரும் கல்லூரி மாணவி மமிதா பைஜூ, நிவின் பாலியை காதலிக்க தொடங்குகிறார். ஆரம்பத்தில் வயது வித்தியாசம் என்று விலகி போகும் நிவின் பாலி, ஒருகட்டத்தில் மமிதா பைஜூவின் அன்பில் மையம் கொள்கிறார். காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார்.
தனது மகளை கல்லூரி படிப்பு முடிந்ததும் வெளிநாடு அனுப்பலாம் என்று திட்டமிட்டிருந்த மமிதா பைஜூவின் குடும்பத்தாருக்கு, இந்த காதல் விவகாரம் தெரியவர பிரச்சினை வெடிக்கிறது. மமிதா பைஜூவை வலுக்கட்டாயமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். வெளிநாடு சென்ற மமிதா பைஜூ என்ன ஆனார்? அவரை நினைத்து வாழும் நிவின் பாலியின் கதி என்ன? இவர்களின் காதல் கைகூடியதா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
காதல் தோல்வியில் மனம் வெதும்புவது, குறும்புக்கார இளம்பெண்ணின் செயல்களினால் வெட்கப்படுவது, மீண்டும் ஒரு காதல் தோல்வியினால் கலங்குவது, என்று பல்வேறு உணர்வுகளை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார், நிவின் பாலி. அவரது நடிப்பு படத்துக்கு பலம்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



