Arts, culture, entertainment and media
தமிழில் 200+ திரைகளில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட்!

நிவின் பாலி - மமிதா பைஜூவின் பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழில் வெளியாகியுள்ளது குறித்து...
பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் போஸ்டர். - படம்: இன்ஸ்டா / ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ்.
நிவின் பாலி - மமிதா பைஜூவின் நடிப்பில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் தமிழில் 200க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது.
கிரீஷ் ஏடி இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த ஆக.21ஆம் தேதி வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலித்து அசத்தியுள்ளது.
மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது தமிழிலும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே 200க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். தன்னை விட வயதில் அதிகமான நிவின் பாலியை காதலித்து திருமணம் செய்துகொள்வதுதான் கதையாக இருக்கிறது.
எளிமையாக கதையாக இருந்தாலும் அது எடுக்கப்பட்டிருக்கும் விதத்தினால் பலரையும் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் மமிதா, நிவின் பாலி உடன் சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் ரூ.23 கோடி பட்ஜெட்டில் உருவாகி அதனை விட பல மடங்கு லாபம் ஈட்டியுள்ளது படக்குழுவையும் சினிமா ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Nivin Pauly - Mamitha Baiju's Bethlehem Kudumba Unit tamil release 200+ screens
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.