Arts, culture, entertainment and media
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தை பாராட்டிய கமல்ஹாசன்.. நேரில் அழைத்து வாழ்த்து!

மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தை பார்த்து படக்குழுவினரை சென்னை அலுவலகத்தில் நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டினார்.
இந்த திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன், படக்குழுவினரின் ஒட்டுமொத்த பணியையும் வெகுவாக பாராட்டியதுடன், அவர்களின் முயற்சிகளுக்கும் படத்தின் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் திரைப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப் மற்றும் உன்னிமாயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களான அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர். பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு, தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து தனது ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறது. நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வரை வசூலித்துள்ளது. தற்போது படம் தமிழில் வெளியாகியுள்ளதால் வசூல் எண்ணிக்கை மேலும் கூடலாம் என தெரிகிறது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
