பாத்ரூமில் வழுக்கி விழுந்த மாமியார்...சாதகமாக பயன்படுத்தி மருமகள் செய்த செயல்
செங்கல்பட்டு,செங்கல்பட்டு பெரிய நத்தம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பெருந்தேவி(61). இவர் தனது மகன் வெங்க டேசன்(34), மருமகள் இந்துஜா (28) மற்றும் பேரன், பேத்திகள
செங்கல்பட்டு பெரிய நத்தம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பெருந்தேவி(61). இவர் தனது மகன் வெங்க டேசன்(34), மருமகள் இந்துஜா (28) மற்றும் பேரன், பேத்திகளோடு வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பெருந்தேவி, தனது வீட்டின் குளியல் அறையில் வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்துவிட்டதாகக்கூறப்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று பெருந்தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.


