பெண்ணின் ஆடை மட்டுமே விவாதப் பொருளாக மாறுவது ஏன்? நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கேள்வி
ஒரு பெண்ணின் ஆடையிலோ, உடல் அமைப்பிலோ மட்டும் பண்பாடு இல்லை, பிறரிடம் நாம் நடந்துகொள்ளும் விதத்திலேயே பண்பாடு இருக்கிறது என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.
மலையாள நடிகையான, ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்களில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இதற்கு முன்பாக அவர் நடித்த ‘ஜகமே தந்திரம்’, ‘புத்தம் புது காலை’ உள்ளிட்ட திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. தொடர்ந்து, கேப்டன், கட்டா குஸ்தி, அம்மு குமாரி உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றன. 2025ல் ‘தக் லைப்’ படத்தில் இவர் நடித்திருந்தார். இவர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்த ‘மாமன்’ படமும் பெரும் வெற்றியை பெற்றது. தற்போது ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படமும் திரையரங்குகளில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.
அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் அணிந்திருந்த உடையை வைத்து பலரும் அவரை விமர்சனம் செய்தார்கள். அதற்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


