Arts, culture, entertainment and media
Aishwarya Lekshmi: "பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாசாரம் இருக்கிறதா?" - ஐஸ்வர்யா லட்சுமி
ஆடை குறித்த விமர்சனங்கள் குறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி| Actress Aishwarya Lekshmi hits back at netizens trolling her outfit. She calls out invasive camera angles and questions societal double standards on culture.

கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வைர நகைக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த ஆடை குறித்துச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலர் விமர்சனங்களைப் பரப்பினர்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவருடைய ஆடை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வைர நகைக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த ஆடை குறித்துச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலர் விமர்சனங்களைப் பரப்பி வந்தனர்.
இந்தச் சர்ச்சை குறித்து மலையாளத்தில் ரஞ்சினி ஹரிதாஸுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், "அந்த நிகழ்வில் புகைப்படக் கலைஞர்கள் எனது முகத்தில் கவனம் செலுத்தாமல், தவறான கோணங்களில் புகைப்படங்கள் எடுப்பதிலேயே கவனம் செலுத்தினர்.
இதனால் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ஒருவர் சங்கடப்படும்போது அவர்களின் உடலமைப்பின் அசைவு இயல்பாகவே மாறிவிடும்.
எனது தனிப்பட்ட எல்லை மீறப்பட்டதாகவே நான் உணர்ந்தேன். நான் அணிந்திருந்த ஆடையால் எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை, ஆனால் அங்கு இருந்தவர்களின் தவறான செயல்களால்தான் நான் சங்கடப்பட்டேன் என்பதை இணையத்தில் விமர்சித்தவர்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர்.
'சங்கடமாக இருந்தால் ஏன் அப்படி ஒரு ஆடையை அணிய வேண்டும்?' என்று பலர் என்னைக் கேள்வி கேட்டிருந்தனர். ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாசாரம் இருக்கிறதா? நம்முடைய நடத்தையில் கலாசாரம் இல்லையா?
பெண்களைப் பற்றித் தவறான கருத்துகளைப் பேசுபவர்களைக் கண்டிக்க இங்கு யாருமில்லை. ஆனால், பெண்கள் மட்டும் தங்கள் ஆடையிலும் தோற்றத்திலும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆரம்பத்தில், இந்த விமர்சனங்களை நான் சிரித்துக் கடந்துவிட்டேன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இது பெரிய விவாதமாக மாறியது எனக்கு அதிர்ச்சியளித்தது.
நாட்டின் ஜிடிபி வளர்ச்சியைப் பற்றியோ, முதியோர் இல்லங்களில் கைவிடப்படும் பெற்றோரைப் பற்றியோ பேசுவதற்கு இங்கு யாருக்கும் நேரமில்லை. ஆனால், ஒரு பெண்ணின் ஆடையைப் பற்றிப் பேசுவதற்கு மட்டும் அனைவருக்கும் நேரம் இருக்கிறது" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
