சுஷாந்த் சிங் மேலாளர் திஷா மரணம்: FIR-ல் உத்தவ் தாக்கரே மகன், நடிகை ரியா பெயர் சேர்ப்பு
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சி.பி.ஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே பெயர் இடம் பெற்று இருக்கிறது.
மும்பையில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மர்மமான முறையில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துப் போனார்.
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு முன்பு அதாவது 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி அவர் மும்பை புறநகர் பகுதியில் உள்ள மலாடில் தான் வாங்கி இருக்கும் வீட்டைப் பார்க்க சென்ற போது அடுக்குமாடி கட்டிடத்தில் 14வது மாடியில் இருந்து விழுந்து இறந்துப் போனார்.



